திருவண்ணாமலை

ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

DIN

போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: பருவ மழை  தொடர்ந்து பெய்து வருவதால், அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த கிராமப்புறங்களில் சாலையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தெருக்கள் தோறும் மின் விளக்குகளைப் பொருத்தி இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சீராக அளவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகள் தோறும் தனி நபர் கழிப்பறை அமைக்க அறிவுறுத்த வேண்டும். கிராம வீதிகள், வீடுகளைச் சுத்தமாக வைத்திருக்க பொதுகக்களுக்கு அறிவுறுத்த  வேண்டும் என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 40 ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT