திருவண்ணாமலை

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

DIN

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமுர்த்தி தலைமை வகித்தார்.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சு.ராயர், மருத்துவ அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை சுகுணா வரவேற்றார்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள், காய்ச்சல் வந்த பிறகு எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் டெங்கு தடுப்பு உறுதிமொழியேற்றனர். இதில், பள்ளியின் முன்னாள் கிராம கல்விக்குழுத் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT