திருவண்ணாமலை

மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து: திருவண்ணாமலை கல்லூரி இரண்டாமிடம்

DIN

வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான கல்லூரி மாணவிகளுக்கான கைப்பந்துப் போட்டியில் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் வேலூர், கடலூர் மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டி வேலூர் மாவட்டம், ஆற்காடு ஸ்ரீமகாலட்சுமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மண்டலம் சார்பில் கலந்து கொண்ட திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர். மேலும், இரண்டாம் ஆண்டு கணிதத் துறை மாணவி வி.மகேஸ்வரி, மூன்றாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி ஜெ.கிருத்திகா ஆகியோர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் வரும் டிசம்பர் 8 முதல் 11-ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலம், காகாடியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
கல்லூரியில் பாராட்டு: வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தலைவர் எம்.என்.பழனி, கல்லூரிச் செயலரும், தாளாளருமான என்.குமார், பொருளாளர் கே.ராஜேந்திரகுமார், கல்வி புல முதன்மையர் அழ.உடையப்பன், முதல்வர் கே.ஆனந்தராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் எம்.கோபி, ஆர்.மீரா மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை
பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT