திருவண்ணாமலை

இளைஞர் அடித்துக் கொலை: நண்பர்கள் 4 பேர் கைது

DIN

திருவண்ணாமலை அருகே இளைஞரை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தொடர்புடையதாக நண்பர்கள் 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருவண்ணாமலை - செங்கம் சாலை, பாவாஜி நகரைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் சக்திவேல் (23). தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மயங்கிக் கிடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில், உயிரிழந்த சக்திவேல், 
அவரது நண்பர் சந்துரு 
ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையை அடுத்த 
அய்யம்பாளையம் பகுதியில் உள்ள மதுக் கடைக்கு மது 
வாங்கச் சென்றனராம்.
அப்போது, திருவண்ணாமலை, வ.உ.சி. நகரைச் சேர்ந்த சுதாகர் (35), சரவணன் (30), இவர்களது நண்பர்கள் நாகராஜ் (24), கோவிந்தராஜ் (29), சத்தியமூர்த்தி ஆகியோரும் அங்கு வந்தனராம். பின்னர், சக்திவேல், சரவணன், சந்துரு ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாம்.
தகராறு முடிந்தபிறகு ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சக்திவேல், சந்துரு ஆகியோர் வீட்டுக்குச் செல்ல பாவாஜி நகர், பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நின்று கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த சரவணன், சுதாகர், நாகராஜ், கோவிந்தராஜ், சத்தியமூர்த்தி ஆகியோர் சேர்ந்து சக்திவேலை கல்லால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த சக்திவேல், மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, சுதாகர், சரவணன், நாகராஜ், கோவிந்தராஜ் ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT