திருவண்ணாமலை

சாத்தனூர் அணையில் 7.5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 24 மணி நேரத்தில் 7.5 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது.
சாத்தனூர் அணையின் உபரி நீர் செவ்வாய்க்கிழமை மாலை திறக்கப்பட்டது. விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதில், 1,000 கன அடி நீர் அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாகவும், 500 கன அடி நீர் தென்பெண்ணை ஆறு வழியாகவும் திறந்துவிடப்பட்டுள்ளது.
7.5 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி: இந்நிலையில், அணையில் உள்ள நீர்மின் உற்பத்தி நிலையம் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டு 24 மணி நேரத்தில் 7.5 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டது. இதேபோல, தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 7.2 மெகா வாட் முதல் 7.5 மெகா வாட் மின்சாரம் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் என்றும், இந்த மின்சாரம் திருவண்ணாமலை மாவட்ட பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்றும் நீர்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT