சாத்தனூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை 85 அடியாக உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள அணை நிரம்பியது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இந்தத் தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடி. அணையின் மொத்த கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடி.
புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்ட உயரம் 84.75 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் கொள்ளளவு 1,924 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2974 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.