வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியவர் கைது
வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் கோபி (25). இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை ஏழுமலைக்கு சொந்தமான நிலத்தின் வரப்பில் கோபியின் தாய் மல்லிகா மாடுகளை மேய்த்தாராம். இதற்கு ஏழுமலை ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மல்லிகா, கோபி இருவரும் சேர்ந்து ஏழுமலையை தாக்கினராம்.
இதில், காயமடைந்த ஏழுமலை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கோபி, மல்லிகா ஆகியோர் மீது வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸார் கோபியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.