திருவண்ணாமலை

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு 

தினமணி

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இதனையொட்டி, காலை அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா அபிஷேகம், தாய் மூகாம்பிகைக்கு மங்கள நீர் சேவை, புஷ்பாஞ்சலி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆதிசக்தி சர்வமங்கள காளியம்மனுக்கு சர்வமங்களா மகா யாகம், அக்னி கரகம் எடுத்தல் உள்ளிட்ட பூஜைகளும் நடந்தேறின.
 பின்னர், அலங்கரிக்கப்பட்ட உற்சவர் அம்மனை பல்லக்கில் வைத்து, கோயில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முத்துமாரியம்மனை வழிபட்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT