திருவண்ணாமலை

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு

DIN

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சனிக்கிழமை திடீரென ஆய்வில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை நகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது. இந்த நிலையில், திருவண்ணாமலை கடலைகடை சந்திப்பு உள்ளிட்ட நகரின் நெரிசல் மிகுந்த பகுதிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அவர், நிழல்கூடத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். இனிமேல், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களும் வரக்கூடாது.
மீறி பேருந்து நிலையத்துக்குள் வரும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பேருந்து நிலையத்தில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, திருவண்ணாமலை நகர டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீஸார், பொதுப்பணித் துறை, நகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT