திருவண்ணாமலை

வைட்டமின் "ஏ' திரவம் வழங்கும் முகாம் நாளை தொடக்கம்

DIN

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் வைட்டமின் "ஏ' திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 20) தொடங்கி, வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், செய்யாறு சுகாதார மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள், நகராட்சிப் பகுதிகளில் வைட்டமின் "ஏ' திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 20) தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிறந்த 6 மாதக் குழந்தை முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் வைட்டமின் 'ஏ' திரவம் வழங்கப்படும். வைட்டமின் "ஏ' திரவத்தை குழந்தைகளுக்கு கொடுக்கப்படுதால், கண், தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
இந்த முகாமில் பங்கேற்கும் கிராம சுகாதாரச் செவிலியர்கள், அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வைட்டமின் "ஏ' திரவம் வழங்குவர். இதன் மூலம் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள சுமார் 80,339 குழந்தைகள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT