திருவண்ணாமலை

சேத்துப்பட்டில் திருநீற்று புதன் கூட்டுத் திருப்பலி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

DIN

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலத்தின் தொடக்க நாளான திருநீற்று புதன் எனும் சாம்பல் புதன் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக 40 நாள்கள் கடைப்பிடிக்கின்றனர். இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாளை புனித வெள்ளியாகவும், 3-ஆம் நாள் உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்கால முதல் நாள் சாம்பல் புதன் என்றழைக்கப்படுகிறது. இதையொட்டி, சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் திருப்பலியில் பங்குதந்தை விக்டர் இன்பராஜ், குருத்தோலையை எரித்து சாம்பலாக்கி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பூசினார்.
இதில் சேத்துப்பட்டு, லூர்துநகர், நிர்மலாநகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

SCROLL FOR NEXT