திருவண்ணாமலை

பள்ளிப் பரிமாற்றுத் திட்டத்தில் மாணவர்கள் கல்வி களப் பயணம்

DIN

பள்ளி பரிமாற்றுத் திட்டத்தின் கீழ், செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செய்யாற்றைவென்றான் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் வியாழக்கிழமை வந்தனர்.
திருவோத்தூர் பள்ளிக்கு வந்த செய்யாற்றைவென்றான் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவோத்தூர் பள்ளி அறிவியல் ஆசிரியர் என்.சக்திநாராயணன், மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தார்.
பின்னர், இரு பள்ளிகளைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தலா 20 பேர் தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பொறுப்பாசிரியர்கள் உதவியோடு கல்வி களப்பயணமாக சென்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், உத்திரமேரூர் கல்வெட்டுகள் ஆகியவற்றை பார்வையிட்டு குறிப்பெடுத்தனர்.
ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர்கள் 
திருவோத்தூர் என்.கன்னியப்பன், செய்யாற்றைவென்றான் கே.ஏழுமலை, இரு பள்ளிகளைச் சேர்ந்த திட்ட பொறுப்பாளர்கள் வே.அருளேசன், கே.ரகுராமன் 
ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT