அறிவியல் கண்காட்சியில் மாணவர்களுக்குப் பரிசு
துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த அறிவியல்
துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் பரிசு வழங்கினார்.
ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அண்மையில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இதில், இயற்கை விவசாயம், எளிய முறையில் தண்ணீரை சூடுபடுத்துதல், சந்திராயன் 2, மாசு கட்டுபடுத்துதல், கப்பல் கட்டும்தளம் கட்டுதல், மூலிகைச் செடிகள் அமைத்தல் உள்பட பல்வேறு பல்வேறு தலைப்புகளில் அறிவியல் படைப்புகளை மாணவர்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். இதில், சிறந்த அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்த மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியை வசந்தி, ஹேமலதா, கௌசல்யா, ஜெயகவுரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.