முகப்பு
செய்திகள்

பள்ளிச்சட்டம்பி! வரவேற்பு பெறும் பிருத்விராஜின் சிறப்புத் தோற்றம்!

பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது குறித்து...

Updated On : 15 ஏப்ரல், 2026 at 8:49 PM
பள்ளிச்சட்டம்பி படத்தில் நடிகர் பிருத்விராஜ்...
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 8:31 PM

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தில் பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியின் புதிய படம் “பள்ளிச்சட்டம்பி”. இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார்.

கிறிஸ்துவ தேவாலயத்தை மையமாகக் கொண்டு 1980-களில் நடைபெறும் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் புதன்கிழமை (ஏப். 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியுள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படத்தில் பிரபல நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்தப் படத்தில், பட்டேலர் குஞ்சம்பு நம்பியார் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளதாக, படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.

இத்துடன், “பள்ளிச்சட்டம்பி” படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Renowned actor Prithviraj Sukumaran has made a special appearance in the film “Pallichattambi”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.