FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தனுஷுடன் நடிக்கும் பத்தா பட சிறுவன் சாய் பிருத்விராஜ்..! என்ன கதாபாத்திரத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷின் 56ஆவது படத்தில் பத்தா படத்தில் கவனம் பெற்ற சிறுவன் நடிக்கவிருப்பது குறித்து...

9 அக்டோபர் 2026, 12:51 pm IST
தனுஷ் பட பூஜையில், பத்தா படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜ். - படங்கள்: எக்ஸ் / தனுஷ், அட்லீ
பகிர்:

பத்தா படத்தில் கவனம் பெற்ற சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிகர் தனுஷின் 56ஆவது படத்தில் நடிக்கவிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பத்தா படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தேசிய விருது கிடைக்குமென பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் டி56 படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிறுவன் சாய் பிருத்விராஜ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பத்தா படத்தில் வெளியீட்டிற்குப் பிறகு தனுஷ் 56 படக்குழுவினர் அவரது நடிப்பைப் பார்த்து இதில் வாய்ப்பு அளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜ் தனுஷின் மகனாக நடிக்கவிருப்பதாக நேர்காணலில் கூறியுள்ளார்.

டி56 படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி முகுந்தன், வடிவேலு, உறியடி விஜய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Baththa child actor Sai Prithviraj, the young boy acting alongside Dhanush..! Do you know what role he is playing?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments