FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திரைப்பட விழாவில் விருதுக்கு தேர்வான பத்தா படம், சிறுவன் சாய் பிருத்விராஜ்!

இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் விருதுக்குத் தேர்வான பத்தா திரைப்படத்தினைக் குறித்து...

4 வினாடிகள் முன்பு
பத்தா படத்தின் போஸ்டர் - படம்: இன்ஸ்டா / ஸ்டார் ஸ்டூடியோ 18
பகிர்:

கனடாவில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா படத்திற்கும் அதில் நடித்த சிறுவனுக்கும் விருது அளிக்கப்பட்டுள்ளது.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் நடிப்பில் பத்தா படம் வெளியானது. இந்தப் படத்தில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

Advertisement

Advertisement

இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ. 35 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. பிறகு ஓடிடியில் அக்.29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது.

இந்த நிலையில், இந்திய திரைப்பட விழா ஆல்பெர்டாவில் பங்கேற்ற இந்தப் படத்துக்கு சிறந்த படம் என்ற விருது கிடைத்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ரசிகர்களின் மிகுதியான வரவேற்பைப் பெற்ற சிறுவன் சாய் பிருத்விராஜுக்கு சிறந்த நடிகருக்கான (ஸ்பெஷன் மெசன்) விருதுக்கும் தேர்வாகியுள்ளார்.

சிறுவனுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

summary

Baththa wins Best Feature Film at the India Film Festival of Alberta (IFFA) 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.