FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான தமிழ்ப் படம் ‘அறிவு'!

இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ள ‘அறிவு’ என்ற தமிழ்ப் படத்தின் சாதனை குறித்து...

10 வினாடிகள் முன்பு
அறிவு படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / விஜய்குமார்
பகிர்:

கோவாவில் நடைபெறும் 57-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தமிழ்ப் படமான அறிவு’ தேர்வாகியுள்ளது. உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படமாக அமைந்துள்ளது.

மூவிட்ரோன் புரடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படத்தில் உறியடி விஜய் குமார் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா ‘நியூ ஹாரிஜன்ஸ்’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் ஐ.எம். விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வலுவான சமூகச் செய்தியுடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறையுடன் கூடிய கருத்துகளை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்லும் படைப்பாக ‘அறிவு’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்துக்கான ஒளிப்பதிவை தில் ராஜு செய்துள்ளார். டி. இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையில் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.

சர்வதேச அளவில் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

summary

Vijaykumar Tamil film 'Arivu' selected for screening at the International Film Festival of India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.