FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராமாயணா வெளியீட்டால் பைரி படத்தின் 75% காட்சிகள் ரத்து..! பாலிவுட் இயக்குநர் குற்றச்சாட்டு!

பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி வைத்த குற்றச்சாட்டு குறித்து...

பைரி, ராமாயண போஸ்டர்கள், வினோத் கப்ரி - படங்கள்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ், வினோத் கப்ரி
பகிர்:

பாலிவுட் இயக்குநர் வினோத் கப்ரி ராமாயணா படத்தினால் தனது படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

செகந்திராபாதில் பிறந்த வினோத் கப்ரி கேனாட் டேக் திஸ் எனிமோர், மிஸ் தனக்பூர் ஹாசிர் ஹோ ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்றவர். தற்போது இவர் இயக்கிய பைரி என்ற படம் கடந்த அக்.30ஆம் தேதி வெளியானது.

Advertisement

Advertisement

இதே நேரத்தில் நிதீஷ் திவாரி இயக்கத்தில் வெளியான ’ராமாயணா: முதல் பாகம்’ படம் கடந்த நவ.5ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் வருகையால் பைரி படத்துக்கான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து இயக்குநர் வினோத் கப்ரி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பைரி வெளியாகும்போதே மிகவும் குறைவான திரைகளே கிடைத்தது. 80 திரைகளில் 80 காட்சிகளாக வெளியானது. மூன்று நான்கு நாள்களில் படம் 400 திரைகளாக அதிகரித்தன. ஆனால், கடைசி இரண்டு நாள்களில் 75 சதவிகித காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியா முழுவதும் 400 திரைகளில் இருந்து 100க்கும் குறைவான திரைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்தர்களிடம் தொடர்பில் இருக்கிறோம். ஒரேயொரு படத்தை மட்டுமே திரையிட அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார்கள்.

திரையரங்க உரிமையாளர், விநியோகஸ்தர்களிடம் கெஞ்சி கேட்பதெல்லாம் இந்த அந்தியைச் செய்யாதீர்கள். நீங்கள் அதிகளவு பணம் முதலீடு செய்து படம் எடுத்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஆன்மாவை வைத்து படம் எடுத்திருக்கிறோம். எங்களுக்கும் நியாயமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். இந்த அநீதியை நடைபெற விடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுவரை இந்தப் படம் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. இந்தப் படம் உத்தரகண்டில் ஒரு சிறிய மலைக்கிராமத்தில் வயதான தம்பதிகள் 28 ஆண்டுகளாக தங்களது மகனின் வருகைக்காக காத்திருக்கும் கதையாக உருவாகியுள்ளது.

summary

'Theatres Were Told To Screen Only One Specific Film': Vinod Kapri Claims Pyre Lost 75% Shows Amid Ramayana Release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.