அசாதாரணமான சினிமா அனுபவம்... ராமாயணாவைப் பாராட்டிய அட்லி!
ராமாயணா திரைப்படம் குறித்து அட்லி பதிவு...
ராமாயணா திரைப்படத்தை இயக்குநர் அட்லி பாராட்டியுள்ளார்.
நிஷின் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் உருவான ராமாயணா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த இயக்குநர் அட்லி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், “என்ன ஒரு பிரம்மாண்டமான, அற்புதமான அசாதாரணமான சினிமா அனுபவம்!
Advertisement
Advertisement
ராமாயணம் திரைப்படம் உலக அரங்கில் இந்திய சினிமாவின் பெருமையை நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. கற்பனையில் இத்தனை பிரம்மாண்டமாக இருந்தாலும் நமது கலாசாரம் மற்றும் உணர்வுகளின் வேர்களை அழகாகப் பற்றிக்கொண்டிருக்கிறது. பல தலைமுறைகளாலும் கொண்டாடப்படும் காலத்தால் அழியாத ஒரு சினிமா அனுபவமாக ராமாயணம் இருக்கும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.
எனது மகன், மகளுடன் இணைந்து பார்க்கவும், குடும்பத்துடன் கொண்டாடவும் எனது தனிப்பட்ட திரைப்படச் சேகரிப்பில் என்றென்றும் பாதுகாத்து வைக்கவும் விரும்பும் ஒரு திரைப்படம் இது!
சகோதரர்கள் ரன்பீர், யாஷ் மற்றும் சாய் பல்லவி, ரகுல், காஜல், ஷோபனா மேடம் மற்றும் ஒட்டுமொத்த நடிகர் பட்டாளத்தின் நடிப்பையும் வெகுவாக ரசித்தேன்.
குறிப்பாக, இசை மாயாஜாலத்தை நிகழ்த்திய இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் என் அன்பான பாராட்டுகள். அற்புதமான காட்சியமைப்புகளை உருவாக்கிய DNEG நிறுவனத்துக்கும், ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் மிகப்பெரிய பாராட்டுகள்!
நமித் மல்ஹோத்ரா சார், என்னவொரு அசாதாரணமான தொலைநோக்குப் பார்வை! நிதேஷ் திவாரி சார், உங்கள் மீது அளவற்ற மரியாதை! உங்களுடைய கடின உழைப்பு, பணிவு மற்றும் அற்புதமான செயல்படுத்தும் திறன் ஆகியவை இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளன. வாழ்த்துகள்!
அழகாகத் தழுவி எழுதப்பட்ட திரைக்கதைக்காக ஸ்ரீதர் ராகவனுக்கும் எனது சிறப்பான பாராட்டுகள். இந்திய சினிமாவால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு இதுவே சான்று!
நமது கதைகள், நமது கலாசாரம், நமது உணர்வுகள் என அனைத்தையும் உலகமே வியந்து கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாகப் படைக்க முடியும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கிறது. ராமாயணம் ஓர் இந்தியத் திரைப்படம். இதை உலகமே கொண்டாடப் போகிறது!
ஒவ்வொரு தருணத்தையும் உண்மையாகவே ரசித்தேன். இந்த சினிமா அனுபவம் என்றென்றும் என் மனதில் நிலைத்திருக்கும். இரண்டாம் பாகத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.