கண்டுகொண்டாயணா? விமர்சிக்கப்படும் ஏ. ஆர். ரஹ்மான்!
ராமாயணா பாடலுக்காக ஏ. ஆர். ரஹ்மான் விமர்சிக்கப்பட்டு வருகிறார்...
ராமாயணா இசைக்காக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் கார்த்திக் நேத்தா எழுதிய மங்கள வண்ணமே பாடல் அண்மையில் வெளியானது. இதனைப் பாடகர்கள் ஜோத்புர்கர் மற்றும் சைந்தவி இணைந்து பாடியிருந்தனர்.
Advertisement
Advertisement
இப்பாடலைக் கேட்ட ரசிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்ட இசை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில், என்ன சொல்லப் போகிறாய்? பாடலில் ஏ. ஆர். ரஹ்மான் பயன்படுத்தியதுதான் என விமர்சித்து வருகின்றனர்.
அப்பாடலின் இசையும் இதுவும் ஒன்றாக இருப்பதால் இவ்வளவு பெரிய பட்ஜெட் திரைப்படத்திற்கு தன்னுடைய பழைய பாடலிலிருந்தே ஏன் நகலெடுத்தார் என ரசிகர்கள் பதிவிட்டு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
முக்கியமாக, ஹிந்தியில் இப்பாடல் மங்கல் ரங் ஹேய் என்கிற பெயரில் வெளியானது. இதனைக் கேட்ட ஹிந்தி ரசிகர்கள் இப்பாடல் ரஹ்மானின் குன் ஃபயா குன் மாதிரி இருக்கிறது என்று அவரைத் தாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Fans are criticizing music composer A. R. Rahman for the music in Ramayana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.