FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிருத்விராஜின் ஒடியன் படப்பிடிப்பு நிறைவு!

பிருத்விராஜ் - ராகுல் சதாசிவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு...

நடிகர்கள் பிருத்விராஜ், மஞ்சு வாரியர்
பகிர்:

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் உருவாகும் ஒடியன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

பூதகாலம், பிரம்மயுகம், டீயஸ் ஐரே படங்களை இயக்கி ரசிகர்களிடம் நல்ல ஹாரர் இயக்குநர் எனப் பெயரெடுத்த ராகுல் சதாசிவன் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் மஞ்சு வாரியரை முன்னணி கதாபாத்திரங்களாக வைத்து புதிய ஹாரர் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஒடியன் ஏஜ் ஆஃப் இல்லுஷன் (odiyan - age of illusion) எனப் பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமானது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, ஒடியன் என்கிற பெயரில் நடிகர்கள் மோகன்லால், மஞ்சு வாரியர் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, அதே பெயரில் ஹாரர் திரைப்படம் உருவாகி வருவது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

The filming of the movie Odiyan, starring actor Prithviraj Sukumaran, has been completed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.