FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கோபி நயினாரின் காலனி படப்பிடிப்பு நிறைவு!

காலனி படப்பிடிப்பு நிறைவு...

பகிர்:

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் காலனி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நயன்தாரா நடித்த அறம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோபி நயினார். இவர் அடுத்ததாக கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்ட நிலையில் படம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து, இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த மனுஷி என்கிற படத்தை இயக்கினார். அரசியல், பெண்ணிய சிந்தனை கொண்ட படமான இது தணிக்கை வாரியத்தில் சமர்பிக்கப்பட்டு, சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, விளிம்புநிலை மக்களின் வலியைப் பேசும் விதமாக கோபி நயினார் ‘காலனி’ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

’தேனிசைத் தென்றல்’ தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முதற்பார்வை போஸ்டர் மற்றும் விடியோ சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Filming for Gopi Nainar's 'Colony' has wrapped up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments