செய்யாறு டவுன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு
செய்யாறு டவுன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறு டவுன் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
செய்யாறில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உடனடி முன்னாள் ஆளுநர் அன்பு, 2018 - 19ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் தெய்வ.பொற்பாதம், செயலர் எம்.சுந்தரமூர்த்தி, பொருளாளர் டி.எஸ்.பாபு ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து, சேவைத் திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இதைத் தொடர்ந்து, 25 கிலோ கொண்ட 6 அரிசி மூட்டைகள் 6 குடும்பத்தினருக்கும், கண் பரிசோதனை செய்துகொண்ட 5 பேருக்கு கண் கண்ணாடியும், 11 பேருக்கு பாய், தலையணை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள் ஆர்த்திஸ்வரி, வி.பி.உதயசூரியன், மாவட்டத் தலைவர்கள் ஆர்.ராஜேந்திரன், வி.பி.மணி, அய்யனாரப்பன் மற்றும் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.