திருவண்ணாமலை

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

போளூரை அடுத்த மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில் போளூர் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் தயாளன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவர்கள் பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும்போதும் பாதுகாப்பாக இடதுபுறமாகவே செல்ல வேண்டும். பைக், மொபெட் உள்ளிட்டவற்றை ஓட்டக் கூடாது. சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும்.
செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உயர்ரக செல்லிடப்பேசிகளை தவறான வழிகளில் பயன்படுத்தக் கூடாது. 
பதிவு இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் பேசக்கூடாது என்றனர். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT