திருவண்ணாமலை

பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்: காவல் ஆய்வாளர் அறிவுரை

DIN

பெண்கள் தன்னம்பிக்கையோடு தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கல்லூரி மாணவிகளுக்கு செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.கவிதா அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரி நிர்வாகமும், பேர்ல்ஸ் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார்.
கல்லூரிச் செயலர் ம.பரத்ராஜ், பேர்ல்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.கே.தனலட்சுமி, செயலர் பி.மாலதி, தாளாளர் கே.கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தார். முதல்வர் எஸ்.சீதாலட்சுமி வரவேற்றார்.
திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.மீனாட்சி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், ஆண்களைவிட பெண்களே சிறந்தவர்கள். பெண்கள் செல்லிடப்பேசி, ஊடகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றார். மற்றொரு சிறப்பு அழைப்பாளரான செய்யாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.கவிதா பேசியதாவது:
இரக்கம், வீரம், பண்பாடு, விவேகம், விட்டுக்கொடுக்கும் பண்பாடு ஆகிய குணங்கள் நிரம்பியவர்கள் பெண்கள். பெண்கள் தன்னம்பிக்கையோடு தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உளி தாங்கும் சிற்பமாகவும், வலி தாங்கும் உள்ளமாகவும் இருந்தால்தான் பெண்கள் சாதனைகளைப் புரிய முடியும் என்றார்.
முகாமில், கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT