தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை
தேமுதிக போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேத்துப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
தேமுதிக போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேத்துப்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சினிமாத் துறைக்கு வந்து 40ஆண்டுகள் ஆனதையொட்டி, அந்தக் கட்சி சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் கட்சியினர் கலந்து கொள்வது குறித்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில், போளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு போளூர் தொகுதிப் பொறுப்பாளர் ஏழுமலை தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சங்கர், ஒன்றியச் செயலர்கள் பன்னீர்செல்வம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைச் செயலர் அக்பர், மாவட்டச் செயலர் கோபிநாதன், மாநில தொண்டரணி துணைச் செயலர் ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு, மண்டல மாநாட்டில் தொண்டர்கள் கலந்து கொளவது குறித்துப் பேசினர். மாவட்ட அவைத் தலைவர் சுப்பிரமணி, தலைமைக் கழகப் பேச்சாளர் குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.