பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்: 350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாதந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, மார்ச் மாதத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளம், நீச்சல், கபடி, கையுந்துபந்து உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.
காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் வழங்கினார். இதில், மாவட்ட கையுந்துபந்து பயிற்சியாளர் ஆ.முனுசாமி மற்றும் பல்வேறு பள்ளிகளின் உடற்கல்வி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.