முகப்பு
திருவண்ணாமலை

குறைதீர் கூட்டம்: 443 மனுக்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து

Updated On : 15 மே, 2018 at 4:24 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து
443 மனுக்கள் வரப் பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து முதியோர் உதவித் தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 443 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.