திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

செய்யாறில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.பெருமாள் தலைமை வகித்தார். செயலர் ஏழுமலை, பொருளாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் குருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பாளராக சங்கத்தின் மாநிலச் செயலர் ஜனார்த்தனன் பங்கேற்றோர்.
ஆர்ப்பாட்டத்தில், மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.200-ஐ உடனடியாக வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் நிர்யணம் செய்ய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில், மாநிலக் குழு உறுப்பினர் அரிதாசு, ராதாகிருஷ்ணன், வட்டத் தலைவர்கள் சோலை, பழனி, ஜெய்சங்கர், வே.சங்கர், ரமேஷ், முனியன் மற்றும் கரும்பு விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT