திருவண்ணாமலை

அரணி அரசு மருத்துவமனையில் ரத்தம் சுத்திகரிப்புப் பணி: அமைச்சர் தகவல்

DIN

ஆரணி அரசு மருத்துவமனையில் 15 நாள்களுக்குள் ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.4.5 கோடியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான இடத்தை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆரணி அரசு மருத்துவமனையில் சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ7.5 லட்சம் செலவில் ரத்தம் சுத்திகரிப்பு நிலையக் கட்டடம் கட்டப்பட உள்ளது.
புதிய கட்டடம் கட்டுவதற்குள் ரத்தம் சுத்திகரிப்பு இயந்திரம் வந்துவிட்டதால், மருத்துவமனையில் இருக்கும் ஒரு அறையை அதற்காக ஒதுக்கி, அதில் ரத்தம் சுத்திகரிப்புப் பணி தொடங்கப்படும். 15 நாள்களுக்குள் ஆரணி அரசு மருத்துவமனையில் ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.
மேலும், ஆரணி அரசு மருத்துவமனையில் ரூ.4.5 கோடி செலவில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு, பல்வேறு வசதிகளுடன் இயங்கவுள்ளது. இந்தக் கட்டடம் கட்டப்பட்ட பின்னர், ஆரணியில் நோயாளிகளுக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
உடன், அரசு மருத்துவ அலுவலர் நந்தினி, பொதுப்பணித் துறை மருத்துவ இளநிலைப் பொறியாளர் நடராஜன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் க.சங்கர், நகர ஒன்றியச் செயலர்கள் எ.அசோக்குமார்,
பி.ஆர்.ஜி.சேகர், நகர நிர்வாகி பாரி பி.பாபு, எம்.வேலு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.
கஜேந்திரன், பாசறை பி.ஜி.பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT