திருவண்ணாமலை

ஆரணியில்  8 புதிய அரசுப் பேருந்துகளை தொடக்கி வைத்த அமைச்சர்

DIN

ஆரணியில் 8 புதிய அரசுப் பேருந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
ஆரணி - திருச்சி, திருவண்ணாமலை - மதுரை இடையே 2 பேருந்துகள், எலத்தூர் - திருப்பூர், திருவண்ணாமலை - திருப்பூர் இடையே 2 பேருந்துகள், திருவண்ணமலை - சென்னை, தருமபுரி - திருவண்ணாமலை - சென்னை இடையே 4 பேருந்துகள் என மொத்தம் 8 புதிய பேருந்துகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கி வைத்தார்.
விழாவில், செய்யாறு 
எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, ஆரணி கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ எ.கே.அரங்கநாதன், அரசு வழக்குரைஞர் க.சங்கர், நகரச் செயலர் எ.அசோக்குமார், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், பொது மேலாளர் எ.சுந்தரம், துணை மேலாளர்கள் செல்வகுமார், சிவக்குமார், கிளை மேலாளர்கள் இ.வெங்கடேசன், எம்.பன்னீர்செல்வம், ஆர்.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT