திருவண்ணாமலை

வாக்குப் பதிவு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

DIN

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வசதி கொண்ட நவீன வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் உள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை ஆய்வு செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ சனிக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் சத்யபிரத சாஹூ பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு நடத்தி
னார்.
பின்னர், சத்யபிரத சாஹூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் நவீன வசதியுடன் கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலுக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த இயந்திரங்களில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
இனிவரும் தேர்தல்களில் இந்த நவீன வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒரே வாக்காளர் பல்வேறு முகவரியில் பதிவு செய்து பெற்றுள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை கண்டறிந்து, நீக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்ய வந்துள்ளேன். இங்கு, புதிய இயந்திரங்களின் செயல்பாடு குறித்து ஆய்வு 
செய்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.
பேட்டியின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, கோட்டாட்சியர்கள் சீ.தங்கவேலு, உமா மகேஸ்வரி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT