முகப்பு
திருவண்ணாமலை

ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்தி நாடகம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தி நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றன.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:32 AM
பகிர்:

திருவண்ணாமலை ஸ்ரீயோகிராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தி நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றன.
திருவண்ணாமலை  ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீபகவான் யோகிராம் சுரத்குமார் சந்நிதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. 
பக்தி நாடகம்: மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை சென்னை கோபகுடீரம் குழந்தைகள் பங்கேற்ற பக்தி நாடகம் நடைபெற்றது. மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை ஸ்ரீமுரளீதர சுவாமிகளின் சீடர் சென்னை ஏ.பாக்யநாதனின் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. 
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன், ஆஸ்ரமத் தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.