மூளையைத் தின்னும் அமீபா: கேரளத்தில் இளம்பெண் பலி!
கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் மூளையைத் தின்னும் ஆமிபா தொற்றால் இளம்பெண் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செப் ஹாலிடிஸ்’ எனப்படும் மூளையை தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை பெற்று வந்த 26 வயது இளம்பெண், வெள்ளிக்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பலியானதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பலியானவர் ஆலப்புழா மாவட்டம், அம்பலப்புழா அருகே உள்ள நீர்க்குன்னத்தைச் சேர்ந்த ஆர்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார். செவிலியராகப் பணிபுரிந்து வந்த அவர், கடந்த மாதம் அமீபிக் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆலப்புழாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். வியாழக்கிழமை இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் தற்காலிகமாக குறைந்திருந்த நிலையில், இந்த மரணம் நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நிலவி வரும் தட்பவெப்ப நிலையை கருத்தில் கொண்டு, புதிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
A 26-year-old woman undergoing treatment for suspected amoebic meningoencephalitis, also known as brain fever, died at the Government Medical College Hospital here on Friday, health department officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.