கேரளத்தில் கனமழை, நிலச்சரிவால் 8 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலியனாதாக வி.டி. சதீசன் தெரிவித்துள்ளது பற்றி...
கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 8 பேர் பலியனாதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2) தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து முதல்வர் வி.டி. சதீசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
மாநிலத்தில் ஏற்பட்ட இந்தப் பேரிடர் குறித்து வருவாய்த் துறை அமைச்சர், மாவட்டங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து ஆலோசித்து கொண்டு வருகிறேன். நேற்றுடன் ஒப்பிடும்போது, இன்று மழை சற்று குறைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தப் பணியில் அரசியல் தொண்டர்களும், தன்னார்வு நிறுவனங்களும் ஈடுபடும்படி கேட்டுக் கொள்கிறேன். அரசாங்கம் தரப்பில், இந்தப் பணிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.
சமீபத்திய தகவலின்படி, 8 பேர் பலியானதும் 8 பேர் காணாமல் போனதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 பேர் காயமடைந்துள்ளனர். 209 நிவாரண முகாம்களில் 5,792 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 27 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன மற்றும் 196 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
பலியானவர்களின் குடும்பங்களுக்கும், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் அரசு உதவி புரியும். மலைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தொடர வேண்டும்.
மழையின் அளவு குறைந்திருந்தாலும், எந்தவொரு எதிர்பாராத நிகழ்வையும் எதிர்கொள்ளும் வகையில் பணிகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளும் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எந்தவொரு தேவைக்கும் அரசு அமைப்புகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று வி.டி. சதீசன் குறிப்பிட்டுள்ளார்.
Kerala Chief Minister V.D. Satheesan stated on Sunday (August 2) that eight people have lost their lives so far in the landslide that occurred in the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.