நேபாள வெள்ளம்: கேரளத்தைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - அரசு தகவல்
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்தில் இருந்து சுற்றுலாவுக்குச் சென்றவர்களின் நிலை குறித்து...
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளத்தில் இருந்து சுற்றுலாவுக்குச் சென்ற 36 பேர் பாதுகாப்பாக உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொடர்பில் உள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக அழைத்துவருவது பேசிவருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியதாவது:
Advertisement
Advertisement
''தற்போது நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 36 பேர் கொண்ட குழுவினருடன் எங்களால் பேச முடிந்தது. அவர்கள் பாதுகாப்பாகவும், திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து விலகியும் உள்ளனர்.
காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் உள்ளனரா? என்பது குறித்தும் நாங்கள் வெளியுறவு அமைச்சகத்திடம் (MEA) விசாரித்து வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.
நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து போட்டேகோஷி (Bhotekoshi) ஆற்றில் இன்று (ஆக. 26) திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கில் ஏராளமான பாலங்கள், வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. இப்பேரிடரில் சிக்கி இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் நுவாகோட், தாடிங் மாவட்டங்களில் 105 இந்தியர்களைக் காணவில்லை என்று முன்பு தகவல் வெளியானது. எனினும், சிலர் பத்திரமாக உள்ளதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nepal floods: 36 people from Kerala are safe – Government statement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.