சாலைத் தடுப்பில் மோதி இரண்டாகப் பிளந்த பேருந்து: ஒருவர் பலி; 26 பேர் காயம்
கேரளத்தில் சாலைத் தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது குறித்து...
கேரளத்தில் சாலைத் தடுப்பில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் திருச்சூரிலிருந்து கோழிக்கோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று, இன்று காலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கட்டுமானப் பணிகள் நடந்துவரும் குட்டிப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து செல்லும்போது, காலை 11.40 மணியளவில் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
Advertisement
மேலும், ஒரு காரின் மீதும் பேருந்து கவிழ்ந்தது. சாலைத் தடுப்பில் மோதியதில் பேருந்து இரண்டாகப் பிளந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினருடன் அப்பகுதியினரும் சேர்ந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த வைஷ்ணவ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்தவர்களில் 26 பேர் காயமடைந்ததாகவும், 3 பேர் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து அதிவேகமாகச் சென்றதே விபத்துக்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
One dead as speeding bus overturns after hitting divider in Kerala's Kuttippuram
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.