நேபாள வெள்ளம்: இவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்!
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலாவுக்குச் சென்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் நலமுடன் இருப்பதாகத் தகவல்...
நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள் நலமுடன் இருப்பதாக சிதம்பரம் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நகரத்திலிருந்து நேபாளம் ஆன்மீக சுற்றுலா சென்றவர்கள் 23.08.26 தேதி இரவு 10 மணிக்குப் புறப்பட்டார்கள். 23.08.26 முதல் 06.09.26 வரை மொத்தம் 14 நாட்கள் தங்கி பார்வையிட்டு வருவதாக தகவல்.
கும்பகோணத்தின் சூப்பர் யாத்ரா ஏஜென்சி ட்ராவல்ஸ் வாகனத்தில் சென்றவர்களில் நலமுடன் இருப்போரின் விவரம்
Advertisement
Advertisement
முத்துக்குமரேசன் - வயது 58 இவரது மனைவி மைதிலி - வயது 50, தாகம் தீர்த்த பிள்ளையார் கோயில் தெரு, சிதம்பரம்
தியாகராஜன் - வயது 55, சின்ன காஜியா தெரு சிதம்பரம்
நாவு - வயது 50, இவரது மனைவி விஜய புவனேஸ்வரி - வயது 48, ஏஸ்.ஆர். நகர் சிதம்பரம்
கனகசபை - வயது 54, இவரின் மனைவி ராதை - வயது 50, வயலூர் கிராமம். இவர்கள் பெங்களூரில் இருந்து சென்றதாக தகவல்.
தற்போது இவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nepal Floods They are safe! Information from Chidambaram Police Station
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.