நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்
சுற்றுலாவுக்குச் சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி, நேபாள வெள்ளத்தில் மாயமானது குறித்து...
நேபாளத்தில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா சென்ற 12 பேரில், சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி கலைமதி மாயமானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த கனகசபை (68), அவரது மனைவி ராதை (64), ராமலிங்கம் மகன் முத்துகுமரேசன் (56), நவுகபிர்தாஸ் (55), விஜயா புவனேஸ்வரி (55), மைதிலி (49), ரத்தினம் மகன் தியாகராஜன் (50), முருகானந்தம் (70), மாணிக்கம் பெருமாள் மகன் பழனியப்பன் (70), அவரது மனைவி கலைமதி (67), நெய்வேலியைச் சேர்ந்த கோவிந்தராசு மகன் திருமாவளவன் (62), புவனகிரியைச் சேர்ந்த திரிபுரசுந்தரி (67) ஆகிய 12 பேர் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர்.
இந்நிலையில், நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் புதன்கிழமை காலை திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததுடன், சுற்றுலாப் பயணிகள் சென்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேபாள சுற்றுலா வாரியத்தின் தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 105 இந்தியர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் மாயமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள ராணுவம், போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், கடந்த ஆக. 22-ஆம் தேதி நேபாளத்துக்குச் சென்ற நிலையில், அவர்களில் கலைமதி மட்டும் வெள்ளத்தில் மாயமானதாகக் கூறப்படுகிறது. கலைமதியின் நிலை குறித்து அதிகாரிகள் மூலம் தகவல் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Elderly woman from Chidambaram missing in Nepal floods
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.