FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள வெள்ளத்தால் உ.பி., பிகாருக்கு பாதிப்பு? பிகார் முதல்வருடன் அமித் ஷா பேச்சு!

நேபாள வெள்ளத்தால் உத்தரப் பிரதேசம், பிகாருக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகத் தகவல்...

நேபாளத்தில் வெள்ளம் - ANI
பகிர்:

நேபாள வெள்ளத்தால் பிகார் மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் பிகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.

நேபாளத்தின் வடக்கு ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு அந்த நாட்டையே புரட்டிப்போட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் 105 இந்தியர்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 400 பேரைக் காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதில் கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 57 தமிழர்கள் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பேருந்தில் சென்ற 20 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 2 பேருந்துகளில் சென்ற மீதியுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நேபாள காவல்துறையினர், மீட்புப் படையினர் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேபாளத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அண்டை மாநிலமான பிகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு ஏற்படலாமென்று கூறப்படுகிறது.

இதையொட்டி பிகார் மாநிலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிகார் முதல்வர் சாம்ராத் சௌத்ரியிடம் தொலைபேசி மூலமாக பேசியுள்ளார்.

மாநிலத்தில் வெள்ள அபாயம் நிலவும் நிலையில், விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

summary

Will floods in Nepal affect UP and Bihar, Amit Shah speaks with the Bihar Chief Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments