முகப்பு
திருவண்ணாமலை

கிணற்றில் தவறி விழுந்த சமையல் கலைஞர் சாவு

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த சமையல் கலைஞர் இறந்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:44 AM
பகிர்:

கீழ்பென்னாத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பலத்த காயமடைந்த சமையல் கலைஞர் இறந்தார்.
கீழ்பென்னாத்தூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் சமையல் கலைஞர் ராஜா (44). இவர், சில தினங்களுக்கு முன்பு கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 
பின்னர், தீவிரச் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
எனினும், அங்கு அவர் சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.