மனவளக்கலை மன்றம் சார்பில் மனைவி நல வேட்பு விழா
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்றம் சார்பில், மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாடுகளை கைவிட்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது குறித்து விளக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விழா நடத்தப்படுகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் உலக சமுதாய சேவா சங்கக் கொடியை சின்னசாமி ஏற்றினார்.
மனவளக்கலை மன்றத் தலைவர் எஸ்.முரளி வரவேற்றார். மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.வாசு முன்னிலை வகித்தார். பட்டிமன்றப் பேச்சாளர் ஆர்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கணவன் - மனைவி இருவரும் விட்டுக்
கொடுத்து வாழ்வது எப்படி என்பது குறித்து அறிவுரை வழங்கிப் பேசினார்.
இதில், மன்றச் செயலர் டி.சந்திரசேகரன், சங்கப் பொருளாளர் சி.எஸ்.துரை, பொறுப்பாசிரியர் சொ.செ.இளங்கோவன், பேராசிரியர்கள் க.சுப்பராயன், கிருஷ்ணசாமி, ஜெயலட்சுமி மற்றும் 500-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனர்.