திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளி மாணவர்கள் மையத்தில் ஆய்வு

DIN

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இயங்கி வரும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மையத்தை வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் ஆய்வு செய்தார்.
இந்த மையத்தில் மன வளர்ச்சி குன்றிய, தசைவலு இழப்பு, மூளை மற்றும் மூடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு செய்தார். அப்போது, இயன்முறை  பயிற்சியாளர் மகாலட்சுமி, சிறப்பு கல்வியாளர் விமல், மைய பொறுப்பாளர் அம்பிகா மற்றும் உதவியாளர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பிஸ்கேட், உணவுப் பொருள்களை வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT