திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் தீமிதி திருவிழா

DIN

ஆடிப்பூர பிரம்மோத்ஸவ நிறைவு விழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நள்ளிரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான பிரம்மோத்ஸவம் ஜூலை 25-ஆம் தேதி தொடங்கியது. 
அன்று முதல் தினமும் காலை, மாலை வேளைகளில் விநாயகர், பராசக்தியம்மன் உற்சவர் சுவாமிகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அம்மனுக்கு வளைகாப்பு: பிரம்மோத்ஸவத்தின் நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக.3) காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக் குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது. 
மாலை 6 மணிக்கு வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தியம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல்களை படைத்து மகிழ்ந்தனர்.
தீமிதி திருவிழா: இரவு 10 மணிக்கு பராசக்தியம்மன் வீதியுலா நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரே தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT