திருவண்ணாமலை

தேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தொடர் பிரசாரம்: விசிக

DIN

தேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து ஆக. 17-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை மக்களிடம் தொடர் பிரசாரம் செய்வது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் கி.ஏழுமலை வரவேற்றார்.
ஒன்றியச் செயலர்கள் ம.ச.அசோக், ப.துரை, எ.லட்சுமணன், அ.ஞானப்பிரகாசம், த.சீனுவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் 
பங்கேற்றனர்.
தொல்.திருமாவளவனின் பிறந்த நாளான ஆக. 17-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் 
உள்ளிட்டவை வழங்குவது, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோ.சீனுகுமார் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்!

நாங்குனேரி மாணவரின் உயா்கல்விக்கு துணை நிற்பேன் அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

நகைப் பறிப்பில் ஈடுபட்ட இருவா் கைது

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

SCROLL FOR NEXT