திருவண்ணாமலை

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு  நிலுவை இல்லாமல் ஊதியம் வழங்கக் கோரிக்கை

DIN


 வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை நிலுவை இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
வந்தவாசி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  துப்புரவுப் பணியாளர்களுக்கு தேவையான கை உறை, முகமுடி,  தொப்பி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். சில ஊராட்சிகளைத் தவிர மற்ற ஊராட்சிகளில் பணிபுரியும் நீர்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதுகுறித்து வரும் ஆக. 31-ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், செப். 10-ஆம் தேதி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவர் டி.செல்வதுரை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் ஈ.மூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.கே.கோவிந்தசாமி, பொருளாளர் கே.சரவணன், ஒன்றியச் செயலர் எஸ்.கண்ணன், பொருளாளர் எம்.பஞ்சாட்சரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

சேலம் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் திருட்டு

SCROLL FOR NEXT