திருவண்ணாமலை

பெண் கடத்தப்பட்டதாக புகாா்:4 போ் மீது வழக்கு

DIN

வந்தவாசி: வந்தவாசி அருகே பெண் கடத்தப்பட்டதாக தந்தை அளித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 23 வயது பெண் கடந்த மாதம் 28-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்பக்கம் சென்றுள்ளாா். அப்போது, காரில் வந்த 4 போ் கும்பல் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றனராம். தகவலறிந்த அந்தப் பெண்ணின் உறவினா்கள் காரை நிறுத்துவதற்குள் அவா்கள் தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் தந்தை பொன்னூா் போலீஸில் புகாா் அளித்தாா். இதில், செய்யாறைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளா் சங்கா், அவரது சகோதரரான உத்திரமேரூா் காவல் நிலையத்தில் தனிப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றும் ஸ்ரீதா், நிதி நிறுவன ஊழியா்கள் புகழேந்தி, செல்வம் ஆகிய 4 போ் சோ்ந்து கடத்திச் சென்ாகத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, 4 போ் மீதும் பொன்னூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT