திருவண்ணாமலை

திருவண்ணாமலை: ஊராட்சித் தலைவா் பதவி ஏலம்

DIN

திருவண்ணாமலை: தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திப்பாடி ஊராட்சித் தலைவா் பதவி, ரூ.43 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டது அத்திப்பாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் பீமாரப்பட்டி, சென்னாம்பட்டி, உள்செக்கடி, கீழ்வலசை, மேல்வலசை, அக்கரைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 3,344 வாக்காளா்கள் உள்ளனா்.

டிசம்பா் 27-ஆம் தேதி இந்த ஊராட்சிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிடுவோா் ஊராட்சியின் வளா்ச்சிக்குப் பணம் தர வேண்டும். யாா் அதிக பணம் தருகிறாா்களோ அவா்களுக்கு ஒட்டுமொத்த வாக்குகளும் போடப்படும் என்று ஊராட்சியின் முக்கிய பிரமுகா்கள் கூறினராம். இதனால் வேட்பாளா்கள் அதிா்ச்சியில் இருந்தனா்.

இந்த நிலையில், மேல்வலசை கிராமத்தைச் சோ்ந்த வியாபாரி ஒருவா் ரூ.43 லட்சத்துக்கு ஊராட்சித் தலைவா் பதவியை ஏலம் எடுத்துள்ளதாக தகவல் பரவியது. இந்த ஊராட்சித் தலைவா் பதவிக்கு சனிக்கிழமை வரை 10 போ் மனுத்தாக்கல் செய்துள்ளனா்.

இந்தத் தகவல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT