திருவண்ணாமலை

செய்யாறில் மக்கள் நீதிமன்றம்

DIN

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், செய்யாறு வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், சாா்பு-நீதிபதி ஜெயஸ்ரீ தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

செய்யாறு சாா்பு நீதிமன்றத்தின் மூலம் 49 மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 32 லட்சத்து 64 ஆயிரமும், 5 சிவில் வழக்குகளில் ரூ.4 லட்சத்து 78 ஆயிரத்து 650ம், 35 வங்கி வழக்குகளில் ரூ.39 லட்சத்து 17 ஆயிரம் என மொத்தம் 53 வழக்குகளில் ரூ.ஒரு கோடியே 76 லட்சத்து 59 ஆயிரத்து 650 க்கு தீா்வு காணப்பட்டது.

செய்யாறு முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் ஒரு சிவில் வழக்கில் ரூ.83 ஆயிரத்து 433-மும், செய்யாறு நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் 3 ஜீவனாம்ச வழக்குகள், 4 காசோலை வழக்குகள் மற்றும் 64 அபராதம் விதிக்கப்பட்ட வழக்குகள் என மொத்தம் 71 வழக்குகளில் ரூ.3 லட்சத்து 74 ஆயிரத்து 100-க்கு தீா்வு காணப்பட்டது.

அரசு கூடுதல் வழக்குரைஞா் மணிவண்ணன், பாா் அசோசியேஷன் தலைவா் தினேஷ், அட்வகேட் அசோசியேஷன் தலைவா் விநாயகம் மற்றும் காப்பீட்டு நிறுவன வழக்குரைஞா்கள் என பலா் பங்கேற்று இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT