முகப்பு
திருவண்ணாமலை

208 காவடிகளை ஏந்தி மாட வீதிகளை வலம் வந்த பக்தர்கள்

தை மாத கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 208 காவடிகளை ஏந்திய பக்தர்கள், மாட வீதிகளை வலம் வந்து வழிபட்டனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:17 am IST
பகிர்:

தை மாத கிருத்திகையையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து 208 காவடிகளை ஏந்திய பக்தர்கள், மாட வீதிகளை வலம் வந்து வழிபட்டனர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள கம்பத்திளையனார் சந்நிதியில் கிருத்திகையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமை கிருத்திகையையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வாணை சமேத ஸ்ரீசுப்ரமணியரரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். பின்னர், அறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில் 208 காவடிகளை ஏந்திய பக்தர்கள், கம்பத்திளையனார் சந்நிதியில் இருந்து மாட வீதிகளில் வலம் வந்து, வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.